பிரியா வாரியரின் ஆசை இதுதானாம்!


ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் நடித்து வரும் பிரியா வாரியருக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அவர் எல்லா மொழியிலும் நடித்து பெரிய நடிகை ஆவதே லட்சியம் என்று கூறியிருக்கிறார். #PriyaVarrier ‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் நடிப்பவர் பிரியா வாரியர். இவருடைய முதல் படமான இது இன்னும் திரைக்கு வரவில்லை. ஆனால் ஒரே ஒரு கண் அசைவு பாடல் காட்சியால் இந்தியா முழுவதும் பிரபலம் ஆகிவிட்டார். “எனக்கு கேரளாவில் மட்டுமல்ல, நாடுமுழுவதும் இருந்து பாராட்டுகள் வருகின்றன. எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. வானத்தில் மிதப்பது போல் இருக்கிறது. இது எதிர்காலத்திலும் எனக்கு தொடரவேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன். என் அப்பா கலால்துறையில் பணியாற்றுகிறார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நான் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். அம்மா வீட்டை கவனித்துக் கொள்கிறார். படிப்பு நிற்காமல் நடிப்பதற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். இப்போது, எங்கள் கல்லூரியில் நான் பிரபலமாகிவிட்டேன். தோழிகள் மிகவும் பாராட்டினார்கள். என்னை காணும் ரசிகர்கள் பொது மக்கள் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். நான் திடீர் என்று பிரபலமானது வித்தியாசமான அனுபவம். நான் படத்தில் நடிப்பதில் எனது அம்மா அப்பாவுக்கு மகிழ்ச்சி. என் தாத்தா பாட்டி மிகவும் மகிழ்ந்தனர். நான் பெரிய நடிகை ஆக வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். ஏற்கனவே குறும்படங்களில் நடித்திருக்கிறேன். அழகி போட்டியில் பங்கேற்றிருக்கிறேன். நடன போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறேன். கர்நாடக சங்கீதமும் கற்று வருகிறேன். நான் மகளிர் கல்லூரியில் படிக்கிறேன். ஆனால் படத்தில் இருபாலர் கல்லூரியில் படிப்பது போல் நடித்தது இனிய அனுபவம். சினிமாவில் பெரிய நடிகை ஆகவேண்டும். அனைத்து மொழி படங்களிலும் நடிக்க வேண்டும். நல்ல நடிகை என்று பெயர் எடுக்க வேண்டும் என்பது தான் லட்சியம்” என்கிறார்.
Powered by Blogger.