வெளியேறிய 16 பேருக்கும் அமைச்சுப் பதவி வழங்கினால் நான் வெளியேறுவேன்!

அரசாங்கத்திலிருந்து வெளியோறிச் சென்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேருக்கும் மீண்டும் அமைச்சுப் பதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்தால், தான் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்துள்ள 16 பேருக்கும் மீண்டும் புதிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமா ? என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவிய போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
இந்த 16 பேரும் அமைச்சரவையிலிருந்து சென்றதன் பின்னர் அமைச்சரவையில் இருந்த தரித்திரம் நீங்கியுள்ளன. இது சிறந்த ஒரு நிலைமையாகும். இதன்பிறகு செல்வதற்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன் எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டார். 
Powered by Blogger.