ஆபத்தான புதிய சட்டம்- மஹிந்த!

இந்த நாட்டை ஆட்சி செய்த வெள்ளையர்களும் செய்யாத நடவடிக்கைகளை பௌத்த மதத்துக்கு எதிராக உள்நாட்டு கறுப்பு வெள்ளைக்காரர்கள் செய்வது கவலைக்குரியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ராமஞ்ஞா பிரிவின் மகாநாயகர் நாபானே பேமசிரி தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
மதஸ்தலங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை கொண்டுவருவதற்கு அரசாங்கம் தயாராகிவருகின்றது. இந்த சட்ட மூலம் நடைமுறைக்கு வந்தால், ஒரு விகாரையை நிர்மாணிக்க முடியாத நிலைமை உருவாகும்.
இந்த சட்ட மூலத்தில் உள்ள பிரகாரம், ஒரு பிரதேசத்தில் விகாரையொன்றை அமைப்பதாயின், சகல சமயத் தலைவர்களினதும் அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதேபோன்று,தான் ஏனைய சமயத்தவர்களுக்கும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
பௌத்த விகாரைகளை கட்டுப்படுத்துவது தவறு எனவும், இது தொடர்பில் பொது மக்களும், மதத் தலைவர்களும் அறிவுருத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Powered by Blogger.