ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2018 !

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் – பிரான்சு இணைந்து நடாத்திய் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2018 கடந்த 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் புறநகர் பகுதியான கார்லே கோணேஸ் என்னும் இடத்தில் காலை 10.30 மணிக்கு அகவணக்கத்துடன் தேர்வு நிகழ்வு ஆரம்பமாகியது.

மங்கள விளக்கேற்றினை மாநகரபிதா Mr.Maurice Lefevre அவருடன் உதவி முதல்வர் Mr. Benoit Jimenez அவர்களும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு பொறுப்பாளர் திரு. மகேசு அவர்களும், தமிழ்ச் சோலை தலைமைப் பணியக பொறுப்பாளர் திரு. ஜெயக்குமாரன். மற்றும் தேர்வு நடுவர்களான சங்கீத வித்துவான்களும், சங்கீத பூசணங்களான சுவிசு நாட்டிலிலுந்து திரு. செகசோதி ஆறுமுகம் அவர்கள், டென்மார்க்கில் இருந்து திருமதி. குமுதினி பிரதிவிராஜா அவர்களும், சுவிசு நாட்டிலிருந்து அனைத்துலகத் தமிழ் கலை நிறுவனத்தாலும் வந்தருந்த நடன ஆசிரியர்கள் திருமதி. பவானி சிறீதரன் அவர்களும், திருமதி. ஞானசுந்தரி வாசன் அவர்களும், திருமதி. நிமலினி ஜெயக்குமார் அவர்களும்,வயலின் ஆசிரியர் நுண்கலை மாணி திருமதி. தர்மிகா முரளிதரன் அவர்கள் பிரான்சு ஆகியோர் ஏற்றிவைத்திருந்தனர்.
வரவேற்புரையை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகச் செயலாளர் திரு. காணிக்கைநாதன் அவர்கள் உரையாற்றியிருந்தார்.


தேர்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மாநகர முதல்வரும், உதவி முதல்வரும் தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தினரால் பொன்னாடை அணிவித்து மதிப்பளிக்கப்பட்டனர்.

 மாநகர முதல்வர் உரையாற்றும் போது தமிழ் மக்களின் இந்த செயற்பாட்டை மிகவும் பாராட்டுவதாகவும் தமது பாரம்பரியங்கள் அழியவிடாது அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்வதையும் பாராட்டுவதாகவும், அதுவும் தனது பிரதேசத்தில் நடைபெறுவதையிட்டு பெருமையும், மகிழ்வடைவதாகவும் தெரிவித்திருந்தார்.


தொடர்ந்து ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு ஆரம்பமாகியது.
வயலினில் தனது ஆற்றுகையின் வெளிபாட்டை லாககூர்னோவ் தமிழ்ச்சோலை மாணவிசெல்வி. லக்சியா அகிலன் அவர்கள் வழங்கியிருந்தார்.

ஆற்றுகை வெளிபாட்டுத் தேர்வில் வாய்பாட்டு இடம்பெற்றது. ஆற்றுகை வெளிபாட்டினை சோதியா கலைக்கல்லூரி மாணவி செல்வி. அனோஜினி எட்வேட் லூயிஸ் அவர்கள் வழங்கியிருந்தார்.

ஆற்றுகைத்தேர்வு நடனத்தை நர்த்தனதிரா நடனாலய மாணவி செல்வி. சிந்துசா குணரட்ணம் அவர்கள் வழங்கியிருந்தார்.
தொடர்ந்து நடனத்தின் மூலம் தனது ஆற்றுகை திறன் மூலம் செவரோன் தமிழ்ச்சோலை மாணவி மாணவி செல்வி. கஜானி கணேசலிங்கம் அவர்கள் வழங்கியிருந்தார்.


தொடர்ந்து ஆற்றுகை வெளிபாட்டுத்தேர்வு வயலின் நடைபெற்றது. மாணவன் செல்வன். பரமேஸ்வரலிங்கம் பிரசாந் அவர்களின் ஆற்றுகைத் திறன் நடைபெற்றது.


சிறப்புரையை அனைத்துலத் தமிழ்க்கலை நிறுவகம் சார்பாக சுவிசு நாட்டிலிருந்து வந்திருந்த நடன ஆசிரியை திருமதி. ஞானசுந்தரி வாசன் அவர்கள் உரையாற்றியிருந்தார். எமது அடுத்த சந்ததியினரை கலையின் ஊடாக வளர்தெடுப்பதோடு நின்று விடாது அவர்களை அடுத்த மிகத் தரம் வாய்ந்ததொரு ஆசியர்களாக ஆக்கும் இப்பெரும் அனைத்தலகத் தேர்வில் தமது மாணவர்களை தந்திருக்கும் ஆசியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், தமிழ்ச்சோலைகளுக்கும், தமிழர் நலன்சார்புகட்டமைப்புகளுக்கும் தனது நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டார்.



வளர்ந்து வரும் எமது கலைக்குழந்தைகளின் வளர்ச்சியில் இத்தேர்வு மிகவும் முக்கியம் வாய்ந்தது என்பதையும், இதில் தகுதிவாய்ந்த ஆசிரியர்களாக தெரிவு செய்யப்படுவோர் தரம்வாய்ந்தவர்களாக இருக்கப்போவதால் அவர்களும் தங்களுக்கென கலைக்குழந்தைகளை பொறுப்புடன் உருவாக்க வேண்டும் என்றும் கலந்து கொண்டு கலைக்குழந்தைகளை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
அதனைத்தொடர்ந்து ஆற்றுகை வெளிப்பாடு நடனம் இடம்பெற்றது. தமிழ்க்கலை மன்ற மாணவி. செல்வி. நிதிலா அரியபுத்திரர் அவர்கள் தனது வெளிபாடுகளை புஸ்பாஞ்சலி பிள்ளையார்துதி, ஜதிஸ்வரம் , வர்ணம், பதம், தில்லானா போன்றவற்றால் வெளிப்புடுத்தியிருந்தார்.


தொடர்ந்து வயலின் மூலம் தனது ஆற்றுகைத்திறனை சோதியா கலைக்கல்லூரி மாணவன் செல்வன். செல்வக்குமாரன் பிரசாத் அவர்கள் வழங்கினார்.
ஆசிரியர் தரத்திற்கான இந்த தேர்வில் பங்கு கொள்ளும் இவ்மாணவர்கள் தமது கலை ஆசிரியர்களிடம் பத்து முதல் பதின்ஐந்து வருடங்களுக்கு மேலாக இக்கலைகளை பயின்று வருகின்றவர்கள். இவர்களில் பலர் பல மேடைகளையும், விருதுகளையும் பெற்றிருக்கின்றார்கள். எப்படிப்பட்ட திறமைசாலிகளாக இருந்தாலும் இந்த பரீட்சைமூலம் அவர்களின் திறனை இன்னும் வெளிகொணர்வதோடு, அதனை மற்றவர்களுக்கும் வெளிகாட்டி எல்லோரையும் ஊக்கப்படுத்தும் ஒரு செயற்பாடாகவே இது அமைந்திருக்கின்றது.
இத்தேர்வு நிகழ்வில் பல கலை முதன்மை ஆசிரியர்களும், மூத்த கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்புச்செய்திருந்தனர். கலையில் ஈடுபாடு கொண்ட மாணவர்கள், பெற்றோர்கள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.
நன்றியுரையை தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் தேர்வுப்பகுதிப் பொறுப்பாளர் திரு. அகிலன் அவர்கள் வழங்கியிருந்தார். மாலை 20.30 மணிக்கு இனிதே நிகழ்வு நிறைவு பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.