மைத்திரி 2028ம் ஆண்டு வரை அதிகாரத்தில் இருப்பார்!

ஜோதிடத்தின் படி தற்போதைய ஜனாதிபதி 2028ம் ஆண்டு வரையில் அதிகாரத்தில் இருப்பார் என்று சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் நிலூகா ஏக்கநாயக்க கூறியுள்ளார். 

இரத்தினபுரி பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். 

எதிர்காலத்தில் நல்லாட்சியை வசனத்தில் அல்லாமல் செயற்பாட்டில் கொண்டு வந்து மக்களின் வாழ்க்கையில் இருக்கின்ற கஷ்டங்களை நீக்கும் ஜனாதிபதி ஒருவரின் பாக்கியம் இந்த நாட்டிற்கு உதயமாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

எதிர்காலத்தில் மக்களின் நலனுக்காக தற்போதைய ஜனாதிபதி செயற்படுவார் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தனக்கு ஜோதிட அறிவு இருப்பதாவும், ஜோதிடத்தின் படி அவரே தொடர்ந்து அதிகாரித்தில் இருப்பார் என்றும் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் நிலூகா ஏக்கநாயக்க கூறியுள்ளார்.
Powered by Blogger.