லசந்தவின் குறிப்பேடு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சந்திரத வாகிஷ்டவிடம்!

சன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் சம்பந்தப்பட்ட முக்கிய தகவல்கள் அடங்கி இருப்பதாக கூறப்படும் அவரது குறிப்பேடு, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சந்திரத வாகிஷ்டவிடம் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார குறிப்பேட்டை, சந்திரா வகிஷ்டவிடம் வழங்கியதாக தெரியவந்துள்ளது.
பிரசன்ன நாணயக்கார குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே இந்த தகவல் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு அமைய முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரான சந்திரா வாகிஷ்டவிடமும் விசாரணை நடத்தப்படும் என தெரியவருகிறது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரசன்ன நாணயக்கார, லசந்த கொலை தொடர்பாக பல முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Powered by Blogger.