போதை பொருட்களுடன் 36 இளைஞர்கள் கைது !

சிவனொளிபாதமலைக்கு போதை பொருட்களுடன் வந்த 36 பேரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

ஹட்டன் பொலிஸ் மோப்பநாயின் உதவியுடன் ஹட்டன் தியகல பகுதியில் நேற்று (31) மாலை மேற்கொள்ளப்பட்ட சோதணையின் போதே கஞ்சா, குடு மற்றும் சட்டவிரோத சிரட்டுகளுடன் மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொழும்பு, காலி, குருணாகல் மற்றும் அவிசாவலை பகுதிகளை சேர்ந்த 20 வயது தொடக்கம் 30 வயதுடையை கைது செய்யப்பட்ட இளைஞர்களை இன்று (01) ஹட்டன் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 
Powered by Blogger.