பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர் கைது!

பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரும் அவரது நான்கு ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சிலாபம் மது ஒழிப்பு பிரிவினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 பிங்கிரிய பகுதியில் உள்ள வீடொன்றில் தலைமறைவாக இருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதன்போது அவர்கள் வசமிருந்த, சில கூரிய ஆயுதங்களும்,ஹெரோயின் உள்ளிட்ட சில போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.  ஓலுமரா என அழைக்கப்படும் 22 வயதே ஆன குறித்த சந்தேகத்திற்குரியவர் வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற பல கொலை சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Powered by Blogger.