திலீபனின் நினைவிடத்தில்7வயது சிறுவன் மனதை நெகிழவைத்த செயல்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்த தியாகி திலீபனின் நினைவிடத்தில் நடந்த சம்பவம் அனைவர் மனதிலும் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். நல்லூர் ஆலயத்தின் பின் வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடம் அமைந்துள்ளது.
திலீபனின் பிறந்தநாள் அன்றும் இவருடைய நினைவு நாள் அன்றும் தான் அவ்விடத்தை நோக்கி பெரும்பாலும் மக்கள் வருவார்கள்.
ஆனால் அண்மையில் திலீபனின் நினைவிடத்திற்கு வந்த சிறுவன் அனைவர் மனதிலும் இடம்பிடித்ததுடன், ஒரு கணம் சிந்திக்கவும் வைத்து விட்டார்.
ஒரு மனிதன் தன்னுடைய பிறந்த தினத்தில் என்ன செய்வான்......? காலை எழுந்து தாய் தந்தையிடம் ஆசி பெற்று, ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்வார்கள்.
இதேநேரம், பிறந்த நாளில் ஏழைகளுக்கு உதவுவோரும் உண்டு, நண்பர்களுடன் வெளியில் சென்று மகிழ்வோரும் உண்டு. ஆனால் ஒரு தியாகியை தேடிச் சென்று ஆசி பெறுவது மிகவும் அரிதான செயலாகும்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் 7 வயது மதிக்கத்தக்க சிறுவன் தன்னுடைய பிறந்த தினத்தில் தியாகி திலீபனின் நினைவிடத்தை தேடிச் சென்று, ஆசி பெற்றுள்ளமை தற்போது அனைவர் மத்தியிலும் பேசப்படுகின்றது.
Powered by Blogger.