வலி.வடக்கில் 700 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளது!


வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களின் 700 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விடுவிக்கப்படவுள்ளது. அங்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலிகள், முகாம்கள் என்பவற்றை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என அறியமுடிகிறது.
பலாலி, வறுத்தலைவிளான், கட்டுவன் சந்தி அச்சுவேலி வீதி, கட்டுவன்- மயிலிட்டி வீதி அதனைச் சுற்றியுள்ள காணிகள், மயிலிட்டி துறைமுகத்துக்கு முன்னாள் உள்ள காணிகள் என்பன விடுவிக்கப்படவுள்ளன.
இந்தக் காணிகள் எதிர்வரும் புத்தாண்டு தினத்தன்று மக்களிடம் கையளிக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் பருத்தித்துறை – பொன்னாலை வீதியும் முழுமையாக மக்களின் பாவனைக்குத் திறந்து விடப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.