நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் 7 பேர் காணமல் போயுள்ளனர்!

ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 7 பேர் நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

கடந்த வௌ்ளிக்கிழமை குறிப்பிட்ட 7 பேரும் நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதிக்கான தமது சுற்றுலா பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறு காணமல் போனவர்களை தேடும் பணிகளை பொலிஸார் தற்போது ஆரம்பித்துள்ளனர். 

காணமல் போனவர்கள் நேற்று (08) காலை 11 மணியளவில், பொலிஸ் அவசர அழைப்பு சேவை இலக்கமான 119 என்ற எண்ணுக்கு அழைப்பை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.