மே மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் சபாநாயகருக்கு அறிவிப்போம்!

அரசாங்கத்திலிருந்து விலகிய  16 பேரும் எதிர்க்கட்சியுடன் இணைவது தொடர்பில், எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர், கடிதம் மூலம் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவிக்கவுள்ளதாக, தனது இராஜினாமா கடிதத்தை ​சமர்ப்பித்திருக்கும் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
அத்துடன், மே ​08 ஆம் திகதிக்கு முன்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி, தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் எனவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.