நாளை மறுதினம் சகல பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை !

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர், நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளார்.
இதற்கமைய, நாளை மறுதினம் (22) சகல பாடசாலைகளிலும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தை, கல்வி அமைச்சு கண்காணிக்கவுள்ளது.
Powered by Blogger.