மே 8 ஆம் திகதிக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மறுசீரமைப்பு!

எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பித்து இரண்டு வார காலப்பகுதியினுள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, முழு மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அந்த கட்சியின் பொருளாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.  எதிர்வரும் எட்டாம் திகதி எதிர்கட்சியில் அமருவதாக கூறிய தரப்பினர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஏறாவூரில் வெற்றிகரகமான மே தினக்கூட்டத்தை நடாத்த தீர்மானித்துள்ளனர்.

 8 ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ள இரண்டு வார காலப்பகுதியினுள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, முழு அளவிலான மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Powered by Blogger.