லண்டனில் 90 நிமிடங்களில் இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!

லண்டனில் ஒரே இரவில் 6 பேருக்கு கத்தி குத்து நடந்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின்
தலைநகர் லண்டனில் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே கத்தி குத்து சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. முன்பு எப்போது இல்லாத வகையில் லண்டனில் தற்போது கத்து குத்து சம்பவம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்றி இரவு 4 இடங்களில் 6 பேருக்கு கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளது. இதில் இரண்டு இளைஞர்கள் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பொலிசார் கூறுகையில், தலைநகரான லண்டனில் இன்று இரவு 90 நிமிடங்களில் 6 பேருக்கு கத்தி குத்து ஏற்பட்டுள்ளது. http://video.dailymail.co.uk/video/mol/2018/04/05/8896121996181618510/640x360_MP4_8896121996181618510.mp4 இதில் முதல் சம்பவம் லண்டனின் Mile End பகுதியில் மாலை 6 மணிக்கு நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தால் மூன்று இளைஞர்கள் காயங்களுடன் மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டிருந்தனர். இரண்டு போர் மோசமான நிலையில் உள்ளனர். இந்த சம்பவம் முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் East India Dock-லிருந்து சுமார் 2 மைல் தொலைவில் உள்ள இடத்தில் இளைஞர் ஒருவர் மோசமாக கத்தி குத்து காயங்களுடன் ஆவதிப்பட்டார்.
அந்த இடத்திற்கு விரைவதற்குள் அடுத்த சில நிமிடங்களில் Newham பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவன் இளைஞர்கள் கொண்ட ஒரு குரூப்பால் தாக்கப்பட்டு, கத்தி குத்துக்கு ஆளானார். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் முழுவிவரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலும் ஒருவர் மீது கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது எனவும் பொலிசார் கூறியுள்ளனர். லண்டனில் கடந்த மாதங்களில் இரண்டு வாரங்களில் மட்டும் 13 பேர் கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளது. மேலும் இன்று இரவு Mile End பகுதியில் 3 இளைஞர்களை மர்ம நபர் கத்தியால் குத்திவிட்டதால், உடனடியாக மருத்துவர்கள் விரைந்து அவரை காப்பாற்றுவதற்காக முதலுதவி கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக ஒரு ஆண் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.