இலங்கை கடவுச்சீட்டுக்கு 94 ஆவது இடம்!

உலகின் பலம் வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் சிங்கப்பூர் 164 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றுள்ளது.

பாஸ்போர்ட் பவர் ரேங் இண்டெக்ஸ் -2018 ( passport power rank 2018) பட்டியலில் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பட்டியலில் 163 புள்ளிகளுடன் கொரியா இரண்டாம் இடத்திலும் 162 புள்ளிகளுடன் ஜப்பான் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

இலங்கை 39 புள்ளிகளுடன் 94ம் இடத்தைப் பிடித்துள்ளது. இதேவேளை ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விசா கெடுபிடிகளைக் கருத்தில் கொண்டே இந்தப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.