புத்தாண்டில் இ.போ.சபைக்கு 95 மில்லியன் வருமானம்!

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றது என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து அனைத்து நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துச் சேவைகள் ஈடுபட்டன.
போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் 76 மில்லியன் ரூபாவாகும். இந்த நிலையில் கடந்த புத்தாண்டில் சேவையில் ஈடுபட்ட பேருந்துகள் ஊடாக சபைக்கு இந்த வருமானம் கிடைக்கப் பெற்றது என்று பிரதி பொது முகாமையாளர் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.