இன்று மட்டக்களப்பு மாநகரசபையின் கன்னி அமர்வு!

மட்டக்களப்பு மாநகரசபையின் கன்னி அமர்வு மேயர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது, மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகளை சிறந்த முறையில் முன்னெடுப்பது தொடர்பில் கல்வி, சுகாதாரம், காணி, விளையாட்டு, கலை, கலாசாரம், அபிவிருத்தி உட்பட எட்டு மாநகர கட்டளை நியதிக்குழுக்கள் அமைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட 2018ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாநகரசபைக்காக உருவாக்கப்பட்டுள்ள பாதீடுகள் சபையில் முன்வைக்கப்பட்டது.
அமர்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன் மற்றும் மாநகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட 38 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Powered by Blogger.