நாளை கொழும்பு சுக­த­தாச விளையாட்டரங்கில் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டி!

வடக்கு, கிழக்கு உட்­பட நாட்டின் சகல பாகங்­க­ளி­லி­ருந்தும் 138 தங்கப் பதக்­கங்­க­ளுக்கு குறி­வைத்து 2,500க்கும் மேற்­பட்ட வீர, வீராங்­க­னைகள் பங்­கு­பற்றும் 56ஆவது கனிஷ்ட தேசிய மெய்­வல்­லுநர் போட்­டிகள் கொழும்பு சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்கில் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது.
சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்கில் 250 மில்­லியன் ரூபா செலவில் புதி­தாக பதிக்­கப்­பட்­டுள்ள ஓடு­பா­தையில் முத­லா­வது போட்­டி­யாக இப் போட்­டிகள் நடை­பெ­ற­வுள்­ளன.
இன்னும் ஒரு வாரத்தில் இதே அரங்கில் நடை­பெ­ற­வுள்ள கனிஷ்ட தெற்­கா­சிய மெய்­வல்­லுநர் போட்­டிக்­கான திறன்காண் போட்­டி­யாக கனிஷ்ட தேசிய மெய்­வல்­லுநர் போட்­டிகள் அமை­வதால் மெய்­வல்­லு­நர்­களின் ஆற்றல் வெளிப்­பா­டுகள் உய­ரிய நிலையில் இருக்கும் என இலங்கை மெய்­வல்­லுநர் சங்கம் நம்­பிக்கை வெளி­யிட்­டது.
திய­கம, மஹிந்த ராஜ­பக் ஷ விளை­யாட்­ட­ரங்கில் கடந்த வருடம் நடை­பெற்ற 55 கனிஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் 21 புதிய சாத­னைகள் நிலை­நாட்­டப்­பட்­டதால் இம்­முறை புதிய அத­னை­விட சாத­னை­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்கும் என எதிர்­பார்க்க­ப்­ப­டு­கின்­றது.
மேலும் புதி­தாக பதிக்­கப்­பட்­டுள்ள செயற்­கைத்­தள (சின்­தட்டிக்) ஓடு­பா­தையில் இவ் வருடப் போட்டி நடை­பெ­று­வதால் இம்­முறை கடும் போட்டி நிலவும் என நம்­பப்­ப­டு­கின்­றது.
நான்கு தினங்கள் நீடிக்­க­வுள்ள இப் போட்­டி­களின் ஆரம்ப தினத்­தன்று (திங்­கட்­கி­ழமை) நடை­பெ­ற­வுள்ள முத­லா­வது நிகழ்ச்­சி­யான பெண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் தெல்­லிப்­பழை மகா­ஜனா கல்­லூ­ரியின் பழைய மாணவி அனிதா ஜெக­தீஸ்­வரன் இம்­மு­றையும் சிறந்த பெறு­தியை பதிவு செய்வார் என நம்­பப்­ப­டு­கின்­றது.
 தொடர்ச்­சி­யாக தனது சொந்த தேசிய சாத­னையைப் புதுப்­பித்­து­வரும் அனிதா இம்­முறை 3.48 மீற்றர் என்ற  சாத­னையை மீண்டும் புதுப்­பிப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
இவ­ரை­விட அரு­ணோ­தயா மாணவன் நெப்­தலி ஜொய்சன், சாவ­கச்­சேரி இந்து மாணவன் ஆர். புவி­தரன் ஆகி­யோ­ருக்கு இடையில் 20 வய­துக்­குட்­பட்ட  ஆண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் கடும் போட்டி நில­வ­வுள்­ளது.
அத்­துடன் ஹார்ட்லி கல்­லூ­ரியின் வி. யதார்த்தன், எஸ். பிர­காஸ்ராஜ் ஆகிய இரு­வரும் ஆண்­க­ளுக்­கான 20 வய­துக்­குட்­பட்ட சம்­மட்டி எறிதல், பரி­தி­வட்டம் எறிதல் ஆகிய நிகழ்ச்­சி­க­ளிலும் எஸ். மிதுன்ராஜ் ஆண்­க­ளுக்­கான பரி­தி­வட்டம் எறிதல், குண்டு எறிதல் ஆகிய நிகழ்ச்­சி­க­ளிலும் சிறந்த பெறு­தி­களைப் பதிவு செய்து சாத­னை­களை நிலை­நாட்­டவும் உறு­தி­பூண்­டுள்­ளனர்.
இவர்களை விட தென் பகுதி வீர, வீராங்கனைகளும் அதி உயரிய ஆற்றல்களை வெளிப்படுத்தி சாதனைகளை நிலைநாட்டுவதுடன் கனிஷ்ட தெற்காசிய மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான அடைவு மட்டத்தைக் கடப்பதற்கு முயற்சிக்கவுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.