மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று புத்தாண்டு விழா!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று (22) தமிழ் -  சிங்கள புத்தாண்டு விழா நடைபெற்றது.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் கே.எம்.எச்.யு.அக்பர் தலைமையில் நடைபெற்ற இந்த புத்தாண்டு விழாவில், சிறைக் கைதிகள் பலரும் பங்குபற்றி, பல்வேறு பாரம்பரிய கலை கலாசார விளையாட்டுக்களில் ஈடுபட்டனர்.  
இப்புத்தாண்டு விழாவில், மட்டக்களப்பு சிறைச்சாலையின் பதில் சிறைச்சாலை ஆணையாளர் ஆர்.மோகனராஜ், மட்டக்களப்பு லயன்ஸ் கழகத் தலைவர் எல்.ஆர்.டேவிட், கலாநிதி ஏ.செல்வேந்திரன், மகப்பேற்று வைத்திய நிபுநர் டாக்டர் கே.கருணாகரன் உட்பட அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் மற்றும் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் நலன்புரி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது பலூன் ஊதி உடைத்தல், போத்தலில் நீர் நிரப்புதல், ஊசியில் நூல் கோர்த்தல், வினோத உடைப் போட்டி உட்பட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் வெற்றி பெற்றோருக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Powered by Blogger.