பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கும் அறிகுறி!

எதிர்வரும் ஜுலை மாதம் முதல் தனியார் பேருந்து பயணக்கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 இலங்கையின் இரண்டு பிரதான தனியார் பேருந்து சங்கங்களான அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க சம்மேளனம் மற்றும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆகிய இரண்டும் இதனைத் தெரிவித்துள்ளன.

 அண்மையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்தமை, இலங்கை நாணயத்துக்கு நிகரான டொலரின் பெறுமதிஅதிகரிப்பு போன்றன பேருந்து சேவையை நடத்திச் செல்வதில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இந்தநிலையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதல் பேருந்து கட்டணத்தை 10 சதவீதம் அளவில் உயர்த்த நேரும் என்று அந்த சங்கங்களின் பிரதானிகள் தெரிவித்துள்ளனர்.

 எவ்வாறாயினும், பேருந்து பயணக்கட்டணங்களை உயர்த்த வேண்டுமா? இல்லையா? என்பது தொடர்பில் புதிய கட்டண கொள்கை உருவாக்கப்பட்டதன் பின்னரே தீர்மானிக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.