மகரகம புற்றுநோய் வைத்தியசாலை இன்று முதல் பெட் ஸ்கேனர்!

மனுசத் தெரணயின் ஊடாக சுகாதார அமைப்பின ஒத்துழைப்புடன் இலங்கை மக்களின் நிதியுதவியில் மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட பெட் ஸ்கேனர் இயந்திரம் இன்று (01) முதல் மக்கள் சேவைக்காக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கான நிதி பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்டு சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இதன்பின்னர் அமைச்சரவை அங்கீகாரத்துடன் ஜேர்மன் சீமென்ஸ் நிறுவனத்திடமிருந்து 202 மில்லியன் ரூபா செலவில் இந்த இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டது. 

இந்த இயந்திரம் மூலம் அனைத்து விதமான புற்றுநோய்களையும் அடையாளம் காண முடிவதுடன், ஒரு மாதத்துக்கு நூற்றுக்கும் அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

இந்த பெட் ஸ்கேனர் இயந்திரம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி விமானத்தின் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.