திருச்சியில் மாணவர்கள் மீது தடியடி! கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் இளைஞர்கள் திடீர்யென போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் திருச்சி உழவர்சந்தை மேம்பாலம் அருகே  600க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடந்த அதே இடத்தில் திடீர் என காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டத்தில் இறங்கியதால் போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தின. அவர்கள் களைந்து செல்ல மறுத்ததால் அவர்களை தடி அடி நடத்தி கைது செய்துள்ளனர்.
இந்த போராட்டம் பற்றி போலீசார் கூறுகையில் பேஸ்புக், வாட்சப்  மூலம் அழைப்பு கொடுத்து, அனைவரும் ஒன்று கூடியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இவர்களுக்கு என்று ஏதேனும் இயக்கம் உள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.
Powered by Blogger.