சென்னையில் கலவரத்திலும் டோனி செய்த வேலை!

சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் பாதுகாப்பு தளவாடங்கள் கண்காட்சி இன்று தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது. ந்தியாவில் தயாரான நவீன ரக பீரங்கிகள், டாங்குகள், நவீன ராடார்கள், போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்களின் மாதிரிகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதர்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ரஷியா, நியூசிலாந்து, கென்யா உள்ளிட்ட 162 நாட்டு பிரதி நிதிகள் பங்கேற்கும் ராணுவ கருத்தரங்கும் நடைபெறுகிறது. ராணுவ கண்காட்சியையொட்டி மகாபலிபுரம் கடற்கரை அருகே கடலில் வரிசையாக இந்திய போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி இன்று கண்காட்சிக்கு சென்று பார்வையிட்டார். ராணுவ டாங்கிகளின் உள்ளே சென்று அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். கண்காட்சி தொடக்க விழாவையொட்டி போர்க்கப்பல்களில் இருந்து தேகஸ் ரக போர் விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் வீரர்கள் பறந்து சாகசம் நிகழ்த்தி காட்டினர். ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் மூலம் வீரர்கள் தரை இறங்கியும் சாகசம் நிகழ்த்தினர்.
Powered by Blogger.