வெளியானது 'ஜெயலலிதா: மனமும் மாயையும்' புத்தகம்!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் 'ஜெயலலிதாவின் மனமும் மாயையும்' என்ற புத்தகம் எழுத்தாளர் வாஸந்தி எழுதி வெளியாகி இருக்கிறது. 


மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி வெளிவராத பல தகவல்கள் அடங்கிய புத்தகத்தை, எழுத்தாளர் வாஸந்தி ஆங்கிலத்தில் எழுதி, வெளியாகிருந்த நிலையில், அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் ஜெயலலிதா. இதனால் அந்தப் புத்தகம் வெளிவராமல் போனது. 
பின்பு பல பகுதிகள் நீக்கப்பட்டு, மீண்டும் வெளியிடவும் முயற்சிகள் நடந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது எழுத்தாளர் வாஸந்தி எழுதி வெளியிட இருந்த புத்தகம், 'ஜெயலலிதா: மனமும் மாயையும்' என்ற தலைப்பில் தமிழில் மார்ச்சில் வெளியாகியுள்ளது. 
காலச்சுவடு பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது. தற்போது ஆன்லைன் பிரதிகளும் கிடைக்கின்றது.
Powered by Blogger.