நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்தமைக்கு கூட்டு எதிர்க் கட்சிக்கு நன்றி தெரிவிப்பு!

நம்பிக்கையில்லா பிரேரணை மீது நாடாளுமன்றில்  இடம்பெற்ற விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“நம்பிக்கையில்லா பிரேரணையின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டிருந்த முரண்பாடுகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. அரசாங்கத்தில் இரட்டை வேடம் போட்டவர்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தை சுத்தப்படுத்த வழியேற்பட்டுள்ளதுடன், அரசாங்கத்துக்கு உள்ள பலத்தை நிரூபிக்க முடிந்தது. கூட்டு எதிர்க் கட்சி கடந்த தேர்தலில் பெற்ற வெற்றியும் இதன் மூலம் மறைந்து போயுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றில் தோல்வியடையச் செய்யப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 76 பேரும், எதிராக 122 பேரும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.