நாளை ஆதரவாக வாக்களித்தவர்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது!

நாளைய தினம் கூடவுள்ள  ஸ்ரீலங்கா  சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது, ஆதரவாக வாக்களித்தவர்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக, ஒன்றிணைந்து எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று அந்த கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக்  குறிப்பிட்டார்.
"நம்பிக்கையில்லா பிரேரணையின் வெற்றி தோல்வி நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கையிலேயே தங்கியுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் அவர், (ஜனாதிபதி) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு தெளிவான செய்தியை வழங்கியிருந்தால் பிரேரணையை வெற்றிகொண்டிருக்க முடியும்" எனவும் இந்த ஊடக சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் பிரேரணை மீதான விவாதத்திற்கு முதல் நாள் (03) இடம்பெற்ற சில விடயங்கள் காரணமாக,   ஸ்ரீலங்கா  சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.