கண்டி வன்முறை - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

மார்ச் மாதம் முதல் வாரத்திர், கண்டி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதனடிப்படையில் இந்தப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து பொதுமக்களின் முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக இந்த சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட மற்றும் இது தொடர்பில் ஆர்வம் கொண்டுள்ள தரப்பினரிடம் இருந்து தகவல்களையும், சாட்சியங்களையும் எழுத்து மூலம் திரட்டப்படவுள்ளது.
இந்த விடயங்களை சமர்ப்பிக்கும்போது மூன்று பக்கங்களுக்கு மேற்படாத வகையில் தெரிவிப்பதற்கு சம்பந்தப்பட்ட நாள் மற்றும் இடம், நேரம், அடையாளம் காணப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும் எனவும், புகைப்படங்கள், காணொளிகள் அல்லது குரல் பதிவுகளையும் இதன் மூலம் சமர்ப்பிக்க முடியுமெனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
முறைப்பாடுகளை பதிவு செய்ய;-
பிரதேச இணைப்பு அதிகாரி கண்டிப் பிரதேச அலுவலகம்,
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,
இலக்கம் 8/1, பிரைம்ரோஸ் வீதி,
பேராதனை வீதி
கண்டி
விண்ணப்பப்படிவங்களை, எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.