மின் கட்டணம் அதிகரிக்கும்!

அரசாங்கம் எல்.என்.ஜி. மின் உற்பத்தியை நடைமுறைப்படுத்துவதற்கு கவனம் செலுத்தியுள்ளது. விலை மனுக்கோரலுக்கு அப்பால் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து அது தொடர்பில் வேலைத்திட்டம் ஒன்றை முன்வைப்பத்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த திட்டத்தின் மூலம் மின் கட்டணமும் அதிகரிக்கும். ஆகவே அத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 20ம் திகதி மின்சார சபை தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கவுள்ளது. அது நியாயமான போராட்டம் என்பதால் கூட்டு எதிர்கட்சி அதற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 
Powered by Blogger.