கைதாவதை தடுக்க நீதிமன்றத்தை நாடியுள்ள மஹிந்தானந்த அளுத்கமகே!

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் சட்டவிரோதமாக தன்னை கைது செய்வதை தடை செய்ய உத்தரவிடக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். 

தான் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சினால் விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவு செய்த போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி தன்னை கைது செய்வதற்கு பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் முயற்சிப்பதாக அவர் தனது மனுவில் கூறியுள்ளார். 

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் அநீதியான முறையில் தனக்கெதிராக விசாரணை செய்வதாகவும், இதன்காரணமாக தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்க உத்தரவிடுமாறு கோரி மஹிந்தானந்த அளுத்கமகே மனுத் தாக்கல் செய்துள்ளார்.
Powered by Blogger.