சுவிஸ் செல்லும் ஏழை மாணவன்!

கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் 3ஆம் வருட மாணவனாகிய கோவிந்தராசா கோகிலநாதன் சுவிஸில் நடைபெறும் ஓட்டப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார்.
சுவிற்ஸர்லாந்தில் சென்ட் கலன் நகரில் எதிர்வரும் 6ஆம், 7 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஓட்டப் போட்டியில் இவர் பங்கு கொள்வதற்காக சுவிற்ஸர்லாந்து செல்லவுள்ளார்.
இவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நெல்லிக்காடு, காச்சிரம் குடா கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
இலங்கை பல்கலைக்கழகத்தின் சார்பில் நான்கு வீரர்கள் பங்குபற்றும் இப்போட்டியில் ஸ்ரீஜெயவர்த்தனபுர, யாழ்ப்பாணம், களனி ஆகிய பல்கலைக்கழகங்களில் இருந்து தலா ஒவ்வொரு மாணவர்களுடன் இம்மாணவர் பங்கு பற்றவுள்ளார்.

இவர் கடந்த காலங்களில் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை பெற்று தமது திறமைகளை வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.