கூட்டமைப்பு உடன்படிக்கை செய்துகொண்டதா?

பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை, எதிர்த்து வாக்களிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு
உடன்படிக்கை எதனையும் செய்துகொள்ளவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தெஹிவளை விஜய வித்யாலயாவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் பேசுகையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை கொண்டு வந்துள்ளதாகவும், பிரதமர் அதற்கு பதிலளித்துள்ளதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.