ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட குழு இலங்கை வருகிறது!

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட குழு நாளை முதல் 6ஆம் திகதி வரை இலங்கையில் மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளது. இந்தக் குழுவானது ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பான முதற்கட்ட பெறுபேறுகளுக்கான மதிப்பீடுகளை மேற்கொள்ள உள்ளதுடன், எஞ்சியுள்ள சவால்கள் குறித்தும் இலங்கையுடன் பேச்சு நடத்த உள்ளதாக கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகம் தெரிவித்துள்ளது.

தெற்காசிய அறிக்கையாளர் உட்பட சர்வதேச வர்த்தகம் தொடர்பான ஐரோப்பிய நாடாளுமன்ற அங்கத்தவர்களும் இந்தக் குழுவில் உள்ளடங்க உள்ளதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது. ஐரோப்பிய கன்சர்வேடிவ் மற்றும் மறுசீரமைப்பு உறுப்பினர் ஜென் சஹ்ராடில், அறிக்கையாளர் சஜ்ஜாட் கரீம், ஐரோப்பிய மக்கள் கட்சி உறுப்பினர் போல் ருபிக், பொதுவுடமை மற்றும் ஜனநாயகவாதிகள் உறுப்பினர் டேவிட் மார்ட்டின், ஐரோப்பாவின் சுதந்திரம் மற்றும் நேரடி ஜனநாயகம் தொடர்பான உறுப்பினர் டிஸினா பெக்கின், நாடுகள் மற்றும் சுதந்திரம் தொடர்பான ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர் ப்ரன்ஸ் ஒபர்மயர் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்கியுள்ளனர்.

No comments

Powered by Blogger.