புதுக்­கு­டி­யி­ருப்பு மன்­னா­கண்­டல் வீதியைச் சீர­மைக்­க கோரிக்கை!

புதுக்­கு­டி­யி­ருப்புப் பிர­தேச சபைக்­குட்­பட்ட மன்­னா­கண்­டல் வீதி­யைச் சீர­மைத்­துத் தரு­மாறு பிர­தேச மக்­கள் கோரிக்கை விடுக்­கின்­ற­னர்.
முல்லைத்­தீவு மாவட்­டத்­தி­லுள்ள புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தேச சபை­யின் மன்­னா­கண்­டல் 3ஆம் கண்­டம் இடது கரை­யில் உள்ள 168ஆம் இலக்க காணி அரு­கா­மை­யாக செல்­லும் வீதி­யா­னது 1978ஆம் ஆண்­டி­லி­ருந்து திருத்­தப்­ப­டாது போக்­கு­வ­ரத்­துக்கு இடை­யூ­றாக இருக்­கின்­றது. இத­னால் போக்­கு­வ­ரத்­துக்கு மிக­வும் சிர­மப்­ப­டு­வ­தாக பிர­தேச மக்­கள் தெரி­வித்­த­னர். இது தொடர்­பில் அவர்­கள் மேலும் தெரி­வித்­த­தா­வது:
நாங்­கள் மிக­வும் தாழ்­மை­யான இடத்­தில் குடி­யி­ருக்­கின்­றோம். மழை­ நே­ரங்­க­ளில் போக்­கு­வ­ரத்துச் செய்­ய­மு­டி­யாத நிலை­கா­ணப்­ப­டு­கின்­றது. பிள்­ளை­கள் பாட­சாலை செல்­வ­தற்கு மிக­வும் சிர­மப்­ப­டு­கின்­றனர். அது­மட்­டு­மன்றி இந்த வீதி­யில் உள்ள பேராற்­றுப்­பா­ல­மும் இடிந்து ஆபத்­தான நிலை­யில் உள்­ளது.
வீதி திருத்­தம் தொடர்­பில் ஒட்­டு­சுட்­டான் நீர்ப்­பா­சன பொறி­யி­ய­லா­ள­ருக்­கும் தெரி­யப்­ப­டுத்­தி­னோம். திருத்த வேலைக்கு அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் ஒரு வரு­டம் கடந்­தும் எந்­த­வித வேலை­யும் இடம்­பெ­ற­வில்லை. இது பற்றி பிரதி நீர்ப்­பா­ச­னப் பணிப்­பா­ள­ருக்­கும் அறி­வித்­துள்­ளோம்.
உரி­ய­வர்­கள் இதைக் கவ­னத்­தில் எடுத்து வீதி­யை வெகு­வி­ரை­வில் திருத்தி அமைத்து போக்­கு­வ­ரத்­துக்கு வழி­வகை செய்­து­தர வேண்­டும் -– என்­ற­னர்.
இது தொடர்­பில் பிர­தேச நீர்ப்­பா­சனப் பொறி­யியலா­ள­ரி­டம் கேட்­ட­போது, ‘‘இந்த வீதித் திருத்­தம் தொடர்­பில் பிர­தே­சத்­தில் சிலர் ஒப்­ப­மிட்ட கடி­தம் பிர­தேச செய­ல­ருக்கு அனுப்­பப்­பட்­டது. வீதி எமது திணைக்­க­ளத்­துக்கு உட்­பட்­ட­தால் பிர­தேச செய­ல­கத்­தால் எமக்கு அனுப்­பப்­பட்­டது. அதற்­கி­ணங்க எம்­மால் பார்­வை­யி­டப்­பட்டு திருத்­தத்­துக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இரு மருங்கு வேலி­க­ளை­யும் அகற்­றித்­த­ரு­மாறு அப்­ப­குதி அமைப்­புக்­கும் கடி­தம் அனுப்­பிய விண்­ணப்­ப­தா­ர­ருக்­கும் அறி­விக்­கப்­பட்­டது. ஆனால் இது­வரை வேலி அகற்­றப்­ப­ட­வில்லை. இத­னால் வேலை நடை­பெ­ற­வில்லை’ ’ எனத் தெரி­வித்­தார்.

No comments

Powered by Blogger.