நடிகர்கள் மீது பாலியல் சம்பந்தமான குற்றச்சாட்டுக்களை பரபரப்பை கிளப்பும் ஸ்ரீரெட்டி!

தெலுங்கு திரையுலகில் அதிரடியாக பல முன்னணி நடிகர்கள் மீது

பாலியல் சம்பந்தமான குற்றச்சாட்டுக்களை கூறி வருபவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவருடைய ஸ்ரீலீக்ஸ் பட்டியலில், அடுத்தடுத்து சிக்க போவது யார் என ரசிகர்கள் ஆர்வமாக காத்க்கொண்டிருந்தாலும், தெலுங்கு திரையுலக பிரபலங்களோ கதிகலங்கி போய் உள்ளனர். 
இந்நிலையில் பாலியல் ரீதியாக குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்கும் முயற்சியாக அரசுக்கே அறிவுரை கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், பலர் தங்களுடைய செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்களாக இருப்பதாகவும், அவர்களை திருப்தி செய்யும் வகையில் ரெட்லைட் ஏரியாவை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனை அரசே ஏற்பாடு செய்தால், ஆசிபா பேன்ற பெண் குழந்தைகளின் பலாத்கார சம்பவங்கள் குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். 
குழந்தைகளை பாலியல் வகையில் சீண்டினால் அவர்களுக்கு மரண தண்டனை என்ற சட்டம் இயற்றப்பட்டு வரும் நிலையில் ஸ்ரீரெட்டியின் ஆலோசனையை அரசு ஏற்குமா என்பதை சற்று பொறுத்திருந்து பாப்போம். 

No comments

Powered by Blogger.