சமூக வலைத்தளங்கள் ஊடாக பண மோசடி செய்கின்றவர்களுக்கு ஏமாற வேண்டாம்!

அதிஷ்டச் சீட்டுக்கள் வெற்றிகொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பண மோசடி செய்கின்றவர்களுக்கு ஏமாற வேண்டாம் என சுங்க திணைக்களம் கோரியுள்ளது.

 அதிஷ்டச் சீட்டுக்களுக்கான பரிசில்கள் சுங்க பிரிவினரால் வழங்கப்படும் எனக் கூறி இத்தகைய மோசடிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த காலங்களில் இவ்வாறான பல மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 வெளிநாடுகளில் இருந்து பரிசில்கள் அனுப்பப்படுவதாக கூறி மக்களிடம் இருந்து பணம் மோசடி செய்வதாக விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

 இவ்வாறான மோசடிகள் தொடர்பான தகவல்களை 0112 471471 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொண்டு வழங்குமாறு சுங்க பிரிவு அறிவித்துள்ளது.
Powered by Blogger.