தென்மாகாண சபை உறுப்பினர்,மனைவி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

பேருந்து சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென்மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசுன் மற்றும் அவரது மனைவி தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 கடந்த மாதம் 27 ஆம் திகதி இந்த வழக்கு கடுவலை நீதவான் நீதிமன்றித்தில் விசாரணைக்கு எடுத்து கொண்ட போது அவர்கள் இருவரையும் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

 தென்மாகாண சபை உறுப்பினர் கடந்த மாதம் 10 ஆம் திகதி சாரதி ஒருவருடன் ஏற்றட்ட பிரச்சினை காரணமாக அவரை தாக்கியதோடு, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியுள்ளார்.

 பின்னர் அன்று மாலை குறித்த இருவரும் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டனர்.

 சரணடைந்த போது கைதுப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்டும் ரவைகளையும் காவல் துறையினரிடம் கையளித்திருந்தனர்.

 இந்நிலையில் குறித்த கைத்துப்பாக்கியை வைத்திருப்பதற்கான அனுமதி பத்திரம் கடந்த வருடத்துடன் நிறைவடைந்திருப்பதனையும் காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர்.

 கடந்த 27 ஆம் திகதி குறித்த இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

 இதற்கமையவே இன்றைய தினம் குறித்த இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Powered by Blogger.