நடுக்கடலில் தங்கத்துடன் சிக்கிக்கொண்ட கடத்தல்காரர்கள்!

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு பெருந்தொகையான தங்கம் கடத்திச் செல்லப்பட்ட நிலையில், சர்வதேச கடற்பரப்பில் வைத்து கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கடத்தல்காரர்களிடம் இருந்து பல லட்சம் ரூபா பெறுமதியாக சுமார் 2.6 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இலங்கையை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் - பேசாளை பகுதியிலிருந்து இராமேஸ்வரம் நோக்கி சென்ற படகு ஒன்றில் இந்த தங்கம் கடத்தப்பட்டுள்ளது. குறித்த படகை சர்வதேச கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் சோதனை செய்துள்ளனர்.
இதன் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.