ஊடகவியலாளரிடம் இணையத்தள குற்றவியல் (சைபர் க்ரைம்) விசாரணை!

சிறுவர் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரிடம் இணையத்தள குற்றவியல் (சைபர் க்ரைம்) விசாரணைக்குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றும் ஊடகவியலாளர் ஒருவரிடமே இணையத்தள குற்றவியல் விசாரணைக் குழுவினர் இன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.மாநகர சபையில் வைத்து இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இணையத்தளம் ஒன்றில் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி பிரசுரித்த குற்றச்சாட்டிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இணையளத்தள குற்றவியல் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், இன்று யாழிற்கு வருகை தந்த இணையத்தள குற்றவியல் தொடர்பான விசாரணைக்குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Powered by Blogger.