ஆப் தி லயன் விருது பெற்றார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாட்கள் பயணமாக மனைவியுடன் ஆப்ரிக்க நாடுகளுக்கு சென்றுள்ளார். முதலில் எக்குவடோரியல் கினியாவுக்கு சென்றார். அங்கிருந்து புறப்பட்டு இன்று சுவாசிலாந்து நாட்டுக்கு வந்தார். சுவாசிலாந்து விமான நிலையம் வந்தடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, அந்நாட்டின் பிரதமர் பார்பனோஸ் சிபுசிசோ டிலாமினி வரவேற்றார். அதன்பின் அவருக்கு அந்நாட்டு மரபுப்படி அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் சுவாசிலாந்து மன்னர் மூன்றாம் முசுவாதியை சந்தித்து பேசினார். அதன்பின் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து சுவாசிலாந்தில் வெளிநாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் தி லயன் விருது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வழங்கப்பட்டது. சுவாசிலாந்து மன்னர் மூன்றாம் முசுவாதி அதற்கான பதக்கத்தை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு அணிவித்தார்.
Powered by Blogger.