வெசாக் பண்டிகையை கொண்டாட தயார்!

பௌத்த மக்களோடு இணைந்து கத்தோலிக்க மக்களும் வெசாக் பண்டிகையை கொண்டாட தயாராகி உள்ளனர் என்று அதிமேற்றானியார் அதிவணக்கத்துக்குரிய மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பௌத்த மதமானது ஏனைய மதங்களின் விம்பமாக அமைந்துள்ளது என்றும் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இத்தகைய பொதுவான பாரம்பரியங்கள் கொண்ட நாடொன்றில் பிறப்பது ஒருவருக்கு கிடைத்த பாக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
பௌத்த மதத்தின் புனித கோட்பாடுகளின் நன்மைகளை பெற்றுக்கொள்ளும்படி ஆண்டகை கத்தோலிக்க மக்களை கேட்டுள்ளார்.

Powered by Blogger.