மனம் நெகிழ்ந்து நன்றி சொன்ன சிம்ரன்!

பிறந்த நாள் வாழ்த்துகளால் மனம் நெகிழ்ந்து நன்றி சொல்லியிருக்கிறார் சிம்ரன்.
நேற்று சிம்ரனுக்குப் பிறந்த நாள். 42வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள சிம்ரனை, அவருடைய ரசிகர்கள் வாழ்த்துகளால் திணறடித்து விட்டனர். சமூக வலைதளங்களில் அவருக்கு ஏகப்பட்ட வாழ்த்துகள் குவிந்தன. ட்விட்டரில் அவருடைய பிறந்த நாள் டிரெண்டானது.
 
இதில் மனம் நெகிழ்ந்துபோன சிம்ரன், எல்லோருக்கும் தன்னுடைய நன்றியைத் தெரிவித்துள்ளார். “இன்று நான் 42வது வயதில் அடியெடுத்து வைக்கிறேன். என்னுடைய கடவுள், என் வேலை, என் குடும்பம், என்னுடைய ரசிகர்கள், என்னுடன் பணிபுரிபவர்கள், என்னுடைய ஆசிரியர்கள், என் நண்பர்கள் என எல்லோருடைய அன்பாலும் இத்தனை வருடங்கள் கடந்துவிட்டன. கடவுளே, நீ மிகச்சிறந்தவர்” எனத் தெரிவித்துள்ளார் சிம்ரன்.
Powered by Blogger.