மீண்டும் ஹரியுடன் இணையும் சூர்யா!

வேல், ஆறு, சிங்கம் 1, 2, 3 ஆகிய சூப்பர் ஹிட் படங்களை தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார்.
நடிகர் சூர்யா – இயக்குனர் ஹரி கூட்டணியில் ‘வேல்’, ‘ஆறு’, ‘சிங்கம் 1, 2, 3’ ஆகிய படங்கள் உருவானது. இப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது மீண்டும் சூர்யா – ஹரி கூட்டணியில் புதிய படம் உருவாக இருக்கிறது.
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘NGK’ படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதுபோல், இயக்குனர் ஹரியும் விக்ரமை வைத்து சாமி படத்தின் இரண்டாம் பாகமான ‘சாமி ஸ்கொயர்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இப்படம் முடிந்த பின்பு சூர்யா படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படம், ‘சிங்கம்’ பாகங்களின் தொடர்ச்சி இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட கதையாக உருவாக்கி இருக்கிறாராம் ஹரி. 
Powered by Blogger.