சிவசக்தி ஆனந்தனின் நிலைப்பாடு தொடர்பாக கேள்வி ?

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்களிப்பது தொடர்பாக, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனே முடிவு செய்வார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட 16 உறுப்பினர்களில், ஒருவர் சிவசக்தி ஆனந்தன்.
கூட்டமைப்பை விட்டு ஈபிஆர்எல்எவ் வெளியேறியுள்ள நிலையில், சிவசக்தி ஆனந்தனின் நிலைப்பாடு தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து அவர் கருத்து வெளியிடுகையில், “ இந்த அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று ஆண்டுகளாக நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளது.
ஆனாலும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக எமது கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் முடிவு எடுப்பார்” என்று தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.