விருந்துபசாரத்தில் மோதல் ! மூன்று பேர் வெட்டு காயம்!

விருந்துபசாரத்திற்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் வெட்டு காயங்களுடன் சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிலாபம் - அம்கதவில கோச்சிவத்த பிரதேசத்தில் நேற்று மாலை இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.   மோதல் இடம்பெற்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள துப்பாக்கி மற்றும் வாளையும் பிரதேசவாசிகள், காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

 காயமடைந்துள்ளவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களும், மேலும் ஒருவரும் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 அம்கதவில பகுதியை சேர்ந்தவர்களே தாக்குதலில் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், சிலாபம் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Powered by Blogger.