இன்று அல்லது நாளை அமைச்சரவை மாற்றம்!

இன்று அல்லது நாளையதினம் அமைச்சரவை மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று தங்காலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர் மகிந்த அமரவீர, இன்று அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் சாத்தியம் இருப்பதாக கூறியுள்ளார்.

 ஆனாலும் எதிர்வரும் தினங்களில் புதிய அமைச்சரவை சீராக்கல் இடம்பெறும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

 எவ்வாறாயினும், நாளையதினம் புதிய அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று தம்புள்ளையில் கடந்த தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.

 கூட்டு அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.   இந்தநிலையில் புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் போது, ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களது அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றம் ஏற்படாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Powered by Blogger.