காணாமல் போன எனது தந்தை இலங்கையில் உள்ளார்- துர்கா கேசவ்

சிங்கப்பூரைச் சேர்ந்த துர்கா கேசவ் என்ற தமிழ்ப் பெண் காணாமல் போன தமது தந்தை இலங்கையில் இருப்பதாக கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. தமது தந்தையான கனக சுந்தரம் சோமசுந்தரம் கடந்த 1991 ஆம் ஆண்டு காணாமல் போனதாக அவர் தெரிவித்துள்ளார்.

 குறித்த பெண்ணின் தந்தையான கனகசுதந்தரம் சோமசுந்தரம், யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை பிறப்பிடமாகக் கொண்டவராவார்.

 அவரின் சகோதரர்கள், மன்னார் மடு   பண்டிவிரிச்சான் பகுதியில் வசித்து வருவதாகவும் துர்கா கேசவ் தெரிவித்துள்ளார்.

 இந்த நிலையில், தமது உறவினர்களிடமிருந்து தமது தந்தை தொடர்பில் பல்வேறு தகவல்களைப் பெற்றுக்கொண்டதாக துர்கா கேசவ் குறிப்பிட்டுள்ளார்.

 தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தமது தந்தையையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ சந்திக்க தமக்கு திட்டமில்லை என்றும், அவர்களை தொந்தரவு செய்ய தாம் விரும்பவில்லை என்றும் குறித்த பெண் தெரிவித்துள்ளார். எவ்வாறிருப்பினும், எதிர்காலத்தில் தமது உறவுகளைக் காண இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.