தேயிலையில் சீனி கலக்கப்பட்டுள்ளதா?

தேயிலையில் சீனி கலப்படம் செய்யப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 80 தேயிலைத் தொழிற்சாலைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் தேயிலை சபை உள்ளிட்ட தரப்பினர் அதிக கவனம் செலுத்தியிருப்பதுடன், சர்வதேசத்தில் இலங்கையின் தேயிலைக்கு காணப்படும் நற்பெயரை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார். வாய்மூல விடைக்காக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தேயிலையில் சீனி கலப்படம் செய்யப்படுவதாக எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து 80 தேயிலைத் தொழிற்சாலைகள் திடீரென சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்தத் தொழிற்சாலைகளிலிருந்த மாதிரிகள் தேயிலை ஆராய்ச்சி சபைக்கு அனுப்பப்பட்டு அவற்றில் சீனி கலக்கப்பட்டுள்ளதா? அல்லது தேயிலையிலேயே சீனித்தன்மை காணப்படுகிறதா? என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.