சட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கைது!

வெல்லவாய, சியம்பலாண்டுவ மற்றும் புத்தள பொலிஸ் நிலைய அதிகாரிகளால் நேற்று (06) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 03 உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சந்தேகநபர்கள் வெல்லவாய, மஹகலுகொல்ல மற்றும் கொஸ்லந்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 33, 58 மற்றும் 65 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

துப்பாக்கியை வைத்திருந்தமைக்கான காரணம் தொ்டர்பில் சந்தேகநபர்களிடம் விசாரிக்கப்படுவதுடன், மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக பொலிஸார் கூறினர்.
Powered by Blogger.