பிரபல பாடசாலை மாணவர்கள் மூன்று பேர் கைது!

டெமடோல் வகை போதை மாத்திரைகள் 09 ஐ வைத்திருந்த ஆனமடுவ பிரதேசத்தின் பிரபல பாடசாலை மாணவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேற்று இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 17 மற்றும் 18 வயதுடைய பாடசாலை மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று பாடசாலைக்கு விடுமுறை வழங்க தயாராக இருந்த போது குறித்த மாணவர்களிடம் போதை மாத்திரைகள் இருப்பதாக ஏனைய மாணவர்களால் ஆசிரியர் மற்றும் அதிபருக்கு தகவல் வழங்கப்பட்டதையடித்து, மாணவர்களை பரிசோதனை செய்த போது அவர்களிடம் போதை மாத்திரை இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சந்தேக நபர்களான மாணவர்கள் இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறு போதை பொருளை பாடசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.. 

ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Powered by Blogger.